தமிழ் பொங்கு யின் அர்த்தம்

பொங்கு

வினைச்சொல்பொங்க, பொங்கி

 • 1

  (சூடுபடுத்துவதால், ரசாயன மாற்றத்தால் பால், நீர், மாவு முதலியவை) நுரைத்து மேலெழுதல்.

  ‘‘பால் பொங்கிவிடாமல் பார்த்துக்கொள்!’ என்று சொல்லிவிட்டுப் போனாள்’
  ‘தோசை மாவு நன்றாகப் பொங்கியிருக்கிறது’

 • 2

  (உணர்ச்சி) பெருமளவில் வெளிப்படுதல்.

  ‘ஆசை பொங்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்’
  ‘கோபம் பொங்கிற்று’

 • 3

  பேச்சு வழக்கு (சூட்டால் கண்ணில்) பீளை வெளிப்படுதல்.

  ‘‘கண் பொங்கியிருக்கிறதே? இரவு வெகு நேரம் கண் விழித்தாயா?’ என்று நண்பனிடம் விசாரித்தான்’