தமிழ் பொசுக்கு யின் அர்த்தம்

பொசுக்கு

வினைச்சொல்பொசுக்க, பொசுக்கி

 • 1

  (ஒரு பொருளைத் தீயில்) கருகச் செய்தல்/(எரித்தோ, சுட்டோ) சாம்பலாக்குதல்.

  ‘நெருப்பு முடியைப் பொசுக்கிவிட்டது’
  ‘இந்த நோயாளியின் துணியைத் தீயில் போட்டுப் பொசுக்கிவிடுங்கள்’

 • 2

  (கடும் வெயில்) வாட்டுதல்.

  ‘ஆளைப் பொசுக்கும் வெயில்’