தமிழ் பொசுங்கு யின் அர்த்தம்

பொசுங்கு

வினைச்சொல்பொசுங்க, பொசுங்கி

 • 1

  (நெருப்பின் அருகில் இருப்பதால்) கருகுதல்/(நெருப்பில் பட்டு) சாம்பலாதல்.

  ‘முடி பொசுங்கும் நாற்றம்’
  ‘பூச்சி விளக்கில் விழுந்து பொசுங்கிவிட்டது’

 • 2

  (அதிகச் சூட்டால்) வாட்டப்படுதல்.

  ‘கடுமையான வெயிலில் பயிர்கள் பொசுங்கிக்கொண்டிருந்தன’
  ‘தார்ச் சாலையில் செருப்பில்லாமல் நடந்து பாதங்கள் பொசுங்கிவிட்டன’