தமிழ் பொடி யின் அர்த்தம்

பொடி

வினைச்சொல்பொடிய, பொடிந்து, பொடிக்க, பொடித்து

 • 1

  தூளாதல்.

  ‘சீரகம் நன்றாகப் பொடியட்டும்’
  ‘தொட்டால் பொடிந்துவிடக்கூடிய பக்கங்களுடன் ஒரு பழைய புத்தகம்’
  ‘மிளகு சரியாகப் பொடியவில்லை’
  ‘வெயிலிலும் மழையிலும் கிடந்த தென்னை ஓலை பொடியத் தொடங்கியது’

தமிழ் பொடி யின் அர்த்தம்

பொடி

வினைச்சொல்பொடிய, பொடிந்து, பொடிக்க, பொடித்து

 • 1

  தூளாக்குதல்.

  ‘மாத்திரையைப் பொடித்துத் தேனில் குழப்பிக் கொடுங்கள்’

 • 2

  வட்டார வழக்கு (வியர்வை) சிறிய அளவில் தோன்றுதல் அல்லது கோத்தல்; துளிர்த்தல்.

  ‘நெற்றியில் வியர்வை பொடித்திருந்தது’

தமிழ் பொடி யின் அர்த்தம்

பொடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பொடிக்கப்பட்ட நிலையில் இருப்பது; தூள்.

  ‘காப்பிப் பொடி’
  ‘மிளகாய்ப் பொடி’

 • 2

  (நரம்புகளைக் கிளர்ச்சியுறச் செய்யும் பொருட்டு மூக்கில் போட்டுக்கொள்ளும்) வறுத்துப் பொடித்த புகையிலைத் தூள்; மூக்குப்பொடி.

  ‘அவர் புகைபிடிக்க மாட்டார். ஆனால் பொடி போடுவார்’

 • 3

  (வடிவத்தில்) மிகச் சிறியது; சிறு துண்டு.

  ‘கத்தரிக்காயைப் பொடியாக நறுக்கு’
  ‘சாதத்தில் நிறைய பொடிக்கற்கள் கிடந்தன’
  ‘பொடிப்பொடியான எழுத்துகள்’

தமிழ் பொடி யின் அர்த்தம்

பொடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மீன் குஞ்சு; சிறிய மீன்.

  ‘நெத்திலிப் பொடி’
  ‘அயிரைப் பொடி’