தமிழ் பொடிசு யின் அர்த்தம்

பொடிசு

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (வடிவத்தில்) பொடியாக இருப்பது; மிகச் சிறிய அளவு.

  ‘வெண்டைக்காயைப் பொடிசாக நறுக்கு!’
  ‘ஆணி கொஞ்சம் பொடிசுதான்’
  ‘இப்படிப் பொடிசுபொடிசாக எழுதினால் யாரால் படிக்க முடியும்?’

 • 2

  பேச்சு வழக்கு குழந்தைகளை அல்லது சிறுவர்களைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘மண்டபத்தில் பொடிசுகளெல்லாம் விளையாடிக்கொண்டிருந்தன’