தமிழ் பொடி நடையாக யின் அர்த்தம்

பொடி நடையாக

வினையடை

  • 1

    (ஒருவரின் நடையைக் குறிக்கும்போது) எந்த வித அவசரமும் வேகமும் இல்லாமல்; மிகப் பொறுமையாக; மிகவும் நிதானமாக.

    ‘நீ வண்டி ஓட்டும் வேகத்திற்கு, நான் பொடி நடையாக நடந்திருந்தால்கூட இந்நேரம் வீட்டிற்குப் போயிருப்பேன்’
    ‘இந்த நேரத்தில் இங்கு பஸ் கிடையாது. பேசிக்கொண்டே பொடி நடையாக ஊருக்குப் போய்விடலாம்’