தமிழ் பொத்து யின் அர்த்தம்

பொத்து

வினைச்சொல்பொத்த, பொத்தி

 • 1

  (கண், காது, வாய் முதலியவற்றை விரித்த உள்ளங்கையால், விரலால் அல்லது துணியால்) மூடுதல்.

  ‘‘ஏன் இப்படி அசிங்கமாகப் பேசுகிறாய்’ என்று காதைப் பொத்திக்கொண்டாள்’
  ‘துக்கம் தாங்காமல் துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதான்’
  ‘‘சத்தம் போடாதே’ என்று பையனின் வாயைப் பொத்தினேன்’

 • 2

  விரல்களை மடக்கி உள்ளங்கையை மூடுதல்.

  ‘கையைப் பொத்திக்கொண்டு ‘கைக்குள் என்ன இருக்கிறது? சரியாகச் சொன்னால் இது உனக்குத்தான்’ என்றார்’