தமிழ் பொதி யின் அர்த்தம்

பொதி

வினைச்சொல்பொதிய, பொதிந்து

 • 1

  (ஒரு பொருளைத் தாள், துணி முதலியவற்றில் வைத்து) மூடுதல்.

  ‘கடைக்காரன் புளியைத் தாளில் பொதிந்து தந்தான்’
  ‘அவர் குளிருக்கு அடக்கமாக ஜமுக்காளத்தால் பொதிந்து மூடிக்கொண்டு படுத்திருந்தார்’

 • 2

  ஒன்றினுள் பதிந்தோ அல்லது உள்ளடங்கியோ இருத்தல்.

  ‘வறுத்த கறி பொதிந்த ரொட்டித் துண்டு’
  ‘பக்கவாட்டுச் சுவரில் பொதிந்திருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான்’

 • 3

  (பேச்சு, படைப்பு, பார்வை, செயல் முதலியவற்றில் ஒரு தன்மை, கருத்து, உணர்ச்சி போன்றவை) எளிதில் புலப்படாதபடி உள்ளடங்கியிருத்தல்; நிறைந்திருத்தல்; புதைந்திருத்தல்; மறைந்திருத்தல்.

  ‘பார்வையில் பொதிந்திருந்த ஏக்கம்’
  ‘பொருள் பொதிந்த பார்வை’
  ‘பொருள் பொதிந்த அங்க அசைவுகள்’
  ‘ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வதைக் காட்டிலும் அவனுடைய எழுத்தில்தான் அவனுடைய உண்மை இயல்பு பொதிந்திருக்கும்’
  ‘வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக நிகழும் நிகழ்வுகளில்கூட உளவியல் தத்துவங்கள் பொதிந்துகிடக்கின்றன’
  ‘குழந்தைகளிடம் பொதிந்திருக்கும் கலைத் திறமைகளைக் கண்டறிவது முக்கியம்’

தமிழ் பொதி யின் அர்த்தம்

பொதி

பெயர்ச்சொல்

 • 1

  (அளவில் பெரிய) மூட்டை.

  ‘பஞ்சுப் பொதிகள் இருக்கும் இடத்தில் நெருப்பு பற்றிக்கொண்டது’
  ‘பொதி சுமக்கும் கழுதை’

 • 2

  வட்டார வழக்கு சுமார் 450 கிலோ கிராம் கொண்ட ஒரு நிறுத்தலளவு.