தமிழ் பொதுபொதுவென்று யின் அர்த்தம்

பொதுபொதுவென்று

வினையடை

 • 1

  நீர்த்தன்மை மிகுந்து; சொதசொதவென்று.

  ‘மண் பொதுபொதுவென்று இருந்ததால் கால் உள்ளே பதிந்தது’
  ‘காகிதம் மழையில் நனைந்து பொதுபொதுவென்று இருந்தது’

 • 2

  (கை, கால் போன்ற உடலுறுப்புகளைக் குறித்து வரும்போது) அதிக அளவில் நீர் கோத்து.

  ‘இரண்டு கால்களும் பொதுபொதுவென்று வீங்கிப்போயிருந்தன’