தமிழ் பொதுவாக யின் அர்த்தம்

பொதுவாக

வினையடை

 • 1

  (ஒருவருக்குத் தெரிந்ததன் அல்லது ஒருவர் கவனித்ததன் அடிப்படையில் சொல்லும்போது) பெரும்பாலும்; சாதாரணமாக; வழக்கமாக.

  ‘பொதுவாகவே இந்த நேரத்தில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும்’
  ‘பொதுவாக இந்த நோய் குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது’
  ‘எங்கள் ஊர்ப் பக்கத்தில் பொதுவாகப் பெண் வீட்டில்தான் திருமணம் நடக்கும்’

 • 2

  (தெய்வம், குடும்பத்தினர் போன்றோரின் பேரில்) சத்தியமாக.

  ‘ஆண்டவனுக்குப் பொதுவாக நான் சொல்வதெல்லாம் உண்மை’
  ‘என் பிள்ளைகள் பொதுவாகச் சொல்கிறேன், நான் நகையைத் திருடவில்லை’