தமிழ் பொன்னான யின் அர்த்தம்

பொன்னான

பெயரடை

 • 1

  கிடைப்பதற்கு அரியதும் மதிப்பு மிக்கதுமான; அரிய; அருமையான.

  ‘உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்தப் போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாகும்’
  ‘போனால் மீண்டும் கிடைக்காது. இத்தகைய பொன்னான நேரத்தை வீணாக்கலாமா?’
  ‘தலைவர் அவர்களின் பொன்னான யோசனையைச் செயல்படுத்தும் விதத்தில் கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளோம்’
  ‘கண்ணதாசனின் பொன்னான வரிகளை இசையோடு கேட்பது வெகு அருமையான அனுபவம்’