தமிழ் பொன்விழா யின் அர்த்தம்

பொன்விழா

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அமைப்பு, நிறுவனம், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி போன்றவற்றின்) ஐம்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழா.

    ‘சுதந்திர தினப் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் ஒரு ஸ்தூபி நிறுவப்பட்டிருக்கிறது’
    ‘ஆனந்த விகடன் பொன்விழா மலரில் இடம்பெற்றிருந்த கோபுலுவின் கேலிச்சித்திரங்கள் மிகவும் அருமை’