தமிழ் பொம்மை யின் அர்த்தம்

பொம்மை

பெயர்ச்சொல்

 • 1

  (மரம், மண் போன்றவற்றில்) நிஜப் பொருள்களைப் போன்று அல்லது மனிதர், விலங்குகள் முதலியவற்றைப் போன்று சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

  ‘சிறுவன் கையில் கார் பொம்மை இருந்தது’
  ‘பொம்மைத் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளை!’
  ‘நாய் பொம்மையில் ஒரு காலைக் காணோம்’

 • 2

  (ஜவுளிக் கடையில் துணியை அலங்காரமாக வைத்திருப்பதற்குப் பயன்படும் ஆளுயர) மனித உருவம்.

  ‘அவள் ஜவுளிக் கடைப் பொம்மைபோல அலங்காரம் பண்ணிக்கொண்டு நின்றிருந்தாள்’

 • 3

  பேச்சு வழக்கு (புத்தகத்தில் உள்ள) படம்.

  ‘குழந்தை புத்தகத்தில் பொம்மை பார்த்துக்கொண்டிருந்தது’