பொய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொய்1பொய்2

பொய்1

வினைச்சொல்பொய்க்க, பொய்த்து

 • 1

  (மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமல் போதல்.

  ‘பருவமழை பொய்த்ததால் நாட்டில் கடும் பஞ்சம்’
  ‘இப்படி வானம் பொய்த்துவிடும் என்று யார் கண்டார்கள்!’

 • 2

  (நம்பிக்கை, எண்ணம் முதலியவை) நிறைவேறாமல் போதல்.

  ‘உன் வாக்கு பொய்த்தது’
  ‘தன் நம்பிக்கை பொய்த்துவிடுமோ என்று கலங்கினார்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு எதிர்பார்த்தபடி பயிர் விளையாமல் போதல்.

  ‘மழை இல்லாததால் சிறுபோகமும் பெரும்போகமும் பொய்த்துவிட்டன’

பொய் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பொய்1பொய்2

பொய்2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இருக்கும் நிலைமைக்கு மாறாகப் பிறரை நம்பச் செய்வதற்காகக் கூறப்படுவது; பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் கூறப்படுவது; உண்மை அல்லாதது.

  ‘பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்று அவன் சொல்வது பொய்!’
  ‘அவன் உண்மை சொல்கிறானா பொய் சொல்கிறானா என்று தெரியவில்லை’
  ‘அவன் படிப்புக்கு உதவுவேன் என்று அண்ணன் சொன்னது பொய்யாகப் போய்விட்டது’
  ‘சந்திரனுக்கு மனிதர்கள் போக முடியாது என்று சொன்னது பொய்யாகிவிட்டது’

 • 2

  போலி.

  ‘பொய்யான சான்றிதழைக் கொடுத்து வேலைக்குச் சேர்ந்திருக்கிறான்’
  ‘இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு’
  ‘பொய்யான உறவுகளை நம்பி இவ்வளவு காலமாக ஏமாந்திருக்கிறேன்’

 • 3

  பாசாங்கு.

  ‘பொய்த் தூக்கம்’
  ‘பொய்க் கோபம்’
  ‘பொய்ச் சண்டை’