தமிழ் பொரி யின் அர்த்தம்

பொரி

வினைச்சொல்பொரிய, பொரிந்து, பொரிக்க, பொரித்து

 • 1

  (கொதிக்கும் எண்ணெயில் அல்லது நெய்யில் கடுகு) வெடிப்பது போன்ற ஒலியுடன் வறுபடுதல்/அப்பளம் போன்றவை எண்ணெயில் முங்கி வெந்து உண்ணும் நிலையை அடைதல்.

  ‘கடுகு பொரியும் சத்தம் கேட்கிறது’

 • 2

  (சோளம், கடலை முதலியவை) சூட்டில் வறுபடுதல்.

  ‘அவல் நன்றாகப் பொரியவில்லை’

 • 3

  (கோபம், வெறுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக) படபடவென்று பேசுதல்.

  ‘‘என்ன தைரியம் இருந்தால் இப்படிச் செய்வாய்?’ என்று பொரிந்தார்’

தமிழ் பொரி யின் அர்த்தம்

பொரி

வினைச்சொல்பொரிய, பொரிந்து, பொரிக்க, பொரித்து

 • 1

  (கொதிக்கும் எண்ணெயில் அல்லது நெய்யில் கடுகு, அப்பளம் முதலியவற்றை) பொரியச் செய்தல்.

  ‘அப்பளம் பொரிக்கட்டுமா?’
  ‘பொரித்த கருவாடு’

 • 2

  வேகவைத்த காய்கறிகளை அல்லது பச்சைக் காய்கறிகளை அல்லது முட்டை போன்றவற்றை மசாலா சேர்த்தோ சேர்க்காமலோ எண்ணெயில் வதக்குதல்.

 • 3

  (சோளம், கடலை முதலியவற்றை) சூட்டில் வறுத்தல்.

  ‘பட்டாணியைப் பொரித்துப் போடு’

 • 4

  (பறவைகள், ஊர்ந்து செல்லும் சில வகை விலங்குகள் ஆகியவை) தேவையான சூடு உண்டாக்கி முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரச் செய்தல்.

தமிழ் பொரி யின் அர்த்தம்

பொரி

பெயர்ச்சொல்

 • 1

  (அரிசி, சோளம், அவல் போன்றவற்றை) சட்டியில் இட்டு வறுத்துத் தயாரிக்கப்படும், உதிரிஉதிரியாக இருக்கும் ஒரு வகைத் தின்பண்டம்.

  ‘பொரி வாங்கி வழி நெடுகத் தின்றுகொண்டே போனார்கள்’
  ‘சோளப் பொரி’
  ‘அவல் பொரி’