தமிழ் பொருக்கு யின் அர்த்தம்

பொருக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (பாத்திரத்தில்) ஒட்டியிருக்கும் காய்ந்த உணவுத் துண்டு.

  ‘வாணலியில் உப்புமாப் பொருக்கு’

 • 2

  (புண், காயம் முதலியவற்றின் மேல் இருக்கும்) காய்ந்து உலர்ந்த தோல்.

 • 3

  (சேறு முதலியவை உலர்ந்துபோகும்போது) மேலே வரும் சிறுசிறு மண் கட்டிகள்.