தமிழ் பொருத்தம் யின் அர்த்தம்

பொருத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தன்மை, பண்பு போன்றவை ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) ஏற்றதாகவும் ஒத்ததாகவும் சரியானதாகவும் இருக்கும் நிலை.

  ‘தலைப்பு கவிதைக்குப் பொருத்தமாக இருக்கிறது’
  ‘இன்றைய வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவையாக உள்ள சில அரசு நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்’
  ‘இவள் உனக்குப் பொருத்தமான பெண்’
  ‘பாடலின் ஒரு இடத்தில் வயலினுடன் புல்லாங்குழல் பொருத்தமாகச் சேர்ந்துகொள்கிறது’
  ‘என் கேள்விக்கு நீ சொன்னது பொருத்தமான பதில் இல்லை’

 • 2

  சோதிடம்
  (மாப்பிள்ளை ஜாதகத்தையும் பெண்ணின் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது) குறிப்பிட்ட அம்சங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களுக்கு ஒத்திருக்க வேண்டிய நிலை.

  ‘ஜாதகம் பார்த்ததில் பத்துக்கு ஆறு பொருத்தம் சரியாக இருக்கிறது’
  ‘நட்சத்திரப் பொருத்தம்’