தமிழ் பொருந்து யின் அர்த்தம்

பொருந்து

வினைச்சொல்பொருந்த, பொருந்தி

 • 1

  (ஒன்று ஒன்றினுள் அல்லது ஒன்றின் மேல் சரியான விதத்தில்) இணைந்து அல்லது சேர்ந்து அமைதல்.

  ‘கதவில் உள்ள தாழ்ப்பாள் சரியாகப் பொருந்தவில்லை’
  ‘சட்டத்துக்குள் பொருந்தியிருந்த கண்ணாடியைத் தனியே பிரித்து எடுத்தான்’
  ‘கால்சட்டை இடுப்பில் சரியாகப் பொருந்தவில்லை’
  ‘புதுச் செருப்பு காலுக்கு நன்றாகப் பொருந்தியது’

 • 2

  (ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு) பொருத்தமாக, ஏற்றதாக அமைதல்.

  ‘நீங்கள் அனுப்பிய பெண்ணின் ஜாதகம் என் பையன் ஜாதகத்தோடு பொருந்தியிருக்கிறது’
  ‘சிவப்பு நிறம் உனக்கு மிகவும் பொருந்தும். அதே நிறத்திலேயே புடவை எடு!’
  ‘உலகம் முழுவதற்கும் பொருந்தக்கூடிய தத்துவக் கோட்பாடு ஒன்று உண்டா?’