தமிழ் பொருள் யின் அர்த்தம்

பொருள்

பெயர்ச்சொல்

 • 1

  (புலன்களால் உணரக்கூடிய வகையில் இருப்பது தொடர்பான வழக்கு)

  1. 1.1 திட நிலையில் அல்லது திரவ நிலையில் இருப்பதும் உயிரில்லாததுமான ஒன்று

   ‘திடப் பொருள்’
   ‘திரவப் பொருள்’
   ‘தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள்’

  2. 1.2 பணம், சொத்து முதலியவை

   ‘என் தாத்தா பொருள் தேடி பர்மா சென்றதாக அப்பா சொல்லியிருக்கிறார்’
   ‘முன்னோர் சேர்த்துவைத்த பொருளைக் கட்டிக்காத்ததோடு மேலும் பெருக்கும் நோக்கத்தோடு அவர் கடுமையாக உழைத்தார்’
   ‘பொருளாசை பிடித்தவன்’

 • 2

  (சொல், செயல் மூலமாக மனத்தால் உணரப்படுவது தொடர்பான வழக்கு)

  1. 2.1 சொல், தொடர் ஆகியவை தெரிவிப்பது அல்லது குறிப்பது; அர்த்தம்

   ‘ஓர் ஆங்கில வார்த்தையைச் சொல்லி அதற்குப் பொருள் தெரியுமா என்று கேட்டார்’
   ‘எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று தொல்காப்பியர் கூறுகிறார்’
   ‘அகராதியில் ‘குட்டிச்சாத்தான்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் கொடுத்திருக்கிறார்கள்’
   ‘‘காதுகுத்து’ என்ற தொடரின் பொருள் என்ன?’

  2. 2.2 கருத்து

   ‘பொருளற்ற பேச்சு’

  3. 2.3 (உணர்வு, செயல் போன்றவை அல்லது ஒரு கலைப் படைப்பு முதலியவை) வெளிப்படுத்துவது; உணர்த்துவது

   ‘நவீன ஓவியத்தின் பொருளை விளக்கிச் சொல்ல முடியுமா?’
   ‘அவளுடைய புன்னகையின் பொருள் எனக்குப் புரியவில்லை’
   ‘வாழ்க்கையின் பொருள்தான் என்ன?’
   ‘அவன் என்னை அப்படிப் பார்த்ததன் பொருள் என்னவென்றே எனக்கு விளங்கவில்லை’

  4. 2.4 (உரை, கட்டுரை போன்றவற்றுக்கான) தலைப்பு

   ‘‘கலையும் சமுதாயமும்’ என்ற பொருளில் அவர் பேசினார்’
   ‘‘சுற்றுச்சூழல்’ என்ற பொருளில் 500 சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுக’