தமிழ் பொறாமை யின் அர்த்தம்

பொறாமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும்) எரிச்சல் கலந்த மனக்குறை.

    ‘அவன் மற்றவர்களுடைய முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமையால் வெந்துபோகிறவன்’
    ‘படுத்தவுடனே தூங்கிவிடுபவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது’
    ‘நீ பாடுவதைக் கேட்டால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது’