தமிழ் பொறி யின் அர்த்தம்

பொறி

வினைச்சொல்பொறிக்க, பொறித்து

 • 1

  (கல், உலோகம், மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து, உருவம் முதலியவற்றை) வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்.

  ‘திமிலோடு கூடிய எருதின் படம் பொறித்த நாணயம்’
  ‘சோழப் பேரரசுகுறித்த பல முக்கியமான விபரங்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன’
  ‘பள்ளியின் பெயர் பொறித்த பித்தளைத் தகடு’

தமிழ் பொறி யின் அர்த்தம்

பொறி

பெயர்ச்சொல்

 • 1

  (நெருப்பிலிருந்து) சிதறும் துகள்.

  ‘தீப்பொறி’
  உரு வழக்கு ‘சிந்தனையில் ஒரு பொறி தெறித்தது’

தமிழ் பொறி யின் அர்த்தம்

பொறி

பெயர்ச்சொல்

 • 1

  புலனுக்கான உறுப்பு.

  ‘கண், காது போன்ற பொறிகள்’

தமிழ் பொறி யின் அர்த்தம்

பொறி

பெயர்ச்சொல்

 • 1

  (விலங்கு, பறவை முதலியவற்றை) சிக்கவைக்கப் பயன்படுத்தும் சாதனம்.

  ‘காட்டுப் பன்றியைப் பொறி வைத்துப் பிடித்தார்கள்’

 • 2

  இயந்திரம்; சாதனம்.

  ‘சிக்கலான பொறி அமைப்பு உடைய ஏவுகணை’
  ‘அச்சுப் பொறி’
  ‘தட்டச்சுப் பொறி’