தமிழ் பொறிகலங்கு யின் அர்த்தம்

பொறிகலங்கு

வினைச்சொல்-கலங்க, -கலங்கி

  • 1

    (அதிர்ச்சிக்கு உள்ளாவதால்) புலன்கள் குழம்புதல்.

    ‘நண்பன் விபத்தில் இறந்த செய்தி கேட்டதும் ஒரு கணம் எனக்குப் பொறிகலங்கி விட்டது’
    ‘அவன் அடித்த அடியில் எனக்குப் பொறிகலங்கிவிட்டது’