தமிழ் பொறுக்கியெடு யின் அர்த்தம்

பொறுக்கியெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (பலரில் அல்லது பலவற்றுள் சிலரை அல்லது சிலவற்றைத் தகுதி அடிப்படையில்) தெரிவு செய்தல்; தேர்ந்தெடுத்தல்.

    ‘பொறுக்கியெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டிருந்தாலும் உலக அணி பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது’
    ‘பொறுக்கியெடுத்த நாற்பது கவிதைகளைக் கொண்ட ஒரு புதிய தொகுப்பு’