தமிழ் பொறுத்து யின் அர்த்தம்

பொறுத்து

வினையடை

 • 1

  (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து; அடிப்படையாகக் கொண்டு.

  ‘திறமையைப் பொறுத்துச் சம்பளம் வழங்கப்படும்’
  ‘வழக்கு ஜெயிப்பதும் தோற்பதும் வழக்கறிஞரைப் பொறுத்துதான் இருக்கிறது’
  ‘அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்துப் பரிசு கிடைக்கும்’

 • 2

  (சற்று) நேரம் கழித்து.

  ‘இன்னும் சட்டை தயாராகவில்லை; கொஞ்சம் பொறுத்து வா!’