தமிழ் பொறுப்பு யின் அர்த்தம்

பொறுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயலுக்கான விளைவுகளுக்கு ஒருவர்) உள்ளாகும் அல்லது காரணமாக இருக்கும் நிலை.

  ‘சட்டம் ஒழுங்குக் குலைவுக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு என்று அவர் குற்றம்சாட்டினார்’
  ‘வாடிக்கையாளர்களின் உடைமைகள் காணாமல் போனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல’
  ‘உனக்கென்ன கவலை, நஷ்டம் வந்தால் நான்தானே அதற்குப் பொறுப்பு?’

 • 2

  (ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற) கடமை உணர்வு.

  ‘குழந்தையைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள ஒரு நல்ல ஆள் வேண்டும்’
  ‘உன்னிடமிருந்து பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறேன்’
  ‘ரொம்பப் பொறுப்பான பையன், எந்த வேலையையும் நம்பிக் கொடுக்கலாம்’

 • 3

  (பெரும்பாலும்) (உயர் நிலையில் உள்ள) பதவி.

  ‘அரசில் முக்கியமான பொறுப்பு வகிக்கும் அதிகாரி இவர்’
  ‘உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் சிறு தவறும் செய்யக் கூடாது’

 • 4

  ஒப்படைக்கப்பட்டிருப்பதை நிறைவேற்ற வேண்டிய நிலை; கடமை.

  ‘மாநாட்டிற்குப் பந்தல் அமைக்கும் பொறுப்பை என்னிடம் விட்டிருக்கிறார்கள்’
  ‘பொதுமக்களுக்கு உண்மைகளை விளக்கும் பொறுப்பு நமக்கு உண்டு’