தமிழ் பொலபொலவென்று யின் அர்த்தம்

பொலபொலவென்று

வினையடை

 • 1

  (மண், காரை முதலியவற்றைக் குறித்து வரும்போது) பிடிப்பில்லாமல் சிறுசிறு துகள்களாக அல்லது பொடியாக.

  ‘தொட்டவுடன் சுவரிலிருந்து காரை பொலபொலவென்று உதிர்ந்தது’
  உரு வழக்கு ‘கிட்டப்பா பாடும்போது பொலபொலவென்று பிருகாக்கள் உதிரும்’

 • 2

  (சாதம்) ஒன்றோடு ஒன்று ஒட்டாமல்; உதிரி உதிரியாக.

  ‘அப்பாவுக்குச் சாதம் பொலபொலவென்று இருந்தால்தான் பிடிக்கும்’

 • 3

  (கண்ணீர்) துளித்துளியாக.

  ‘அவன் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வடிந்தது’
  ‘அவள் பொலபொலவென்று கண்ணீர் சிந்தினாள்’

தமிழ் பொலபொலவென்று யின் அர்த்தம்

பொலபொலவென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (சூரியன் உதிப்பதைக் குறிக்கும்போது) இருள் கலைந்து வெளிச்சம் மிக விரைவில் அதிகமாகி.

  ‘பேருந்து சென்னையை நெருங்கியபோது பொலபொலவென்று விடிந்துகொண்டிருந்தது’