தமிழ் பொலிவு யின் அர்த்தம்

பொலிவு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரிடம் காணப்படும்) புத்துணர்வு; மலர்ச்சி; (ஒன்றில் காணும்) பிரகாசம்; ஒளி.

  ‘அவர் முகத்தில் பொலிவு இருந்தது’
  ‘தாய்மைப் பொலிவில் அவள் ஜொலித்தாள்’
  ‘புதுப்பிக்கப்பட்ட அந்தக் கோயில் கோபுரம் பொலிவுடன் விளங்கியது’

 • 2

  (கலை முதலியவை குறித்து வரும்போது) வளர்ச்சி பெற்று உன்னதமாக விளங்கும் சிறப்பு.

  ‘கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள் புதுப் பொலிவைப் பெற்றிருக்கின்றன’