தமிழ் பொழி யின் அர்த்தம்

பொழி

வினைச்சொல்பொழிய, பொழிந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (மழை, பனி முதலியவை) அதிக அளவில் கீழே இறங்குதல்/(மழை, பனி முதலியவற்றை வானம்) கொட்டுதல்.

  ‘நேற்று மழை பொழிந்து தள்ளிவிட்டது’
  ‘மேகங்கள் மழையைப் பொழிந்தால் பயிர் பிழைக்கும்’
  ‘முழு நிலவு குளிர்ச்சியான ஒளியைப் பொழிந்தது’
  உரு வழக்கு ‘ஒரே குழந்தை என்பதால் அன்பைப் பொழிகிறாள்’