தமிழ் பொழுது யின் அர்த்தம்

பொழுது

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) நேரம்; காலம்.

  ‘இப்படி வேலை செய்யாமல் இருந்தே பொழுதைப் போக்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயா?’

 • 2

  சூரிய ஒளி உள்ள நேரம்; பகல் நேரம்.

  ‘நன்றாகப் பொழுது விடிந்த பின் புறப்படலாம்’
  ‘பொழுது போய் இவ்வளவு நேரம் ஆகியும் அவள் வரவில்லையே’