தமிழ் பேச்சு யின் அர்த்தம்
பேச்சு
பெயர்ச்சொல்
- 1
- 1.1 பேசும் திறன் ‘குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை’‘பக்கவாத நோய்க்குப் பிறகு அவருடைய பேச்சு பாதிக்கப்பட்டது’
- 1.2 (குறிப்பிட்ட விஷயத்தை) பேசும் செயல் ‘அவர்களுடைய பேச்சு எனக்குப் புரியவில்லை’‘‘இது என்ன அபசகுனமான பேச்சு?’ என்று கண்டித்தார்’‘இதில் வெற்றி தோல்வி என்ற பேச்சே இல்லை’‘பணமாவது, நான் கொடுக்கிறதாவது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை’
- 1.3 (பரபரப்பாகவும் பரவலாகவும் ஒன்றைப் பற்றி) ஒருவருக்கொருவர் அல்லது பலர் பேசிக்கொள்ளும் செயல்; (ஒன்றைப் பற்றிப் பலரும்) ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வது ‘அவர் வேலையை விட்டுவிடப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது’‘குடிதண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக ஊரெல்லாம் ஒரே பேச்சு’‘அந்த வீட்டில் பேய் இருப்பதாக அந்தத் தெரு மக்களிடையே ஒரு பேச்சு இருக்கிறது’
- 1.4 இரண்டு பேர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது ‘எங்கள் பேச்சில் நீ குறுக்கிடாதே’
- 1.5 பேச்சுவார்த்தை ‘சமீபத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தம்பற்றிக் கூட்டணிக் கட்சிகளுக்குள் பேச்சு நடந்தது’‘எல்லைப் பிரச்சினைகுறித்து இரு நாடுகளுக்கிடையே பேச்சு நடந்துவருகிறது’
- 1.6 உரை; சொற்பொழிவு ‘விழாவில் தலைவரின் பேச்சு மட்டும்தான் நன்றாக இருந்தது’‘அந்தக் காலத்தில் பெரியார், அண்ணா பேச்சையெல்லாம் கேட்பதற்கு ரயிலேறி நாங்கள் போவோம்’
- 1.1 பேசும் திறன்
- 2
- 2.1 (ஒன்றைச் செய்வதாகக் கூறி ஒருவர் கொடுக்கும்) வாக்கு; (சொன்ன) சொல் ‘இப்படிப் பேச்சு மாறிவிட்டாயே!’‘பேச்சைக் காப்பாற்ற முடியாதவன் படித்து என்ன லாபம்?’
- 2.2 (குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதாக ஒருவருக்கொருவர்) பேசிவைத்திருப்பது; (வாய்மொழியான) ஒப்பந்தம் ‘பாதிபாதிப் பணம் போட்டுத் தொழில் ஆரம்பிப்பதாகத்தான் எங்களுக்குள் பேச்சு’‘மாமாவுக்குத்தான் அக்காவைக் கொடுப்பது என்று ஒரு பேச்சு இருந்தது’
- 2.3பேச்சு வழக்கு அறிவுரை; யோசனை; புத்திமதி ‘என் பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் இந்தத் தவறெல்லாம் நடந்திருக்காது!’‘உன் பேச்சைக் கேட்டு மோசம்போனோம்’‘அம்மா பேச்சை நான் எப்போதுமே தட்ட மாட்டேன்’‘தலைவர் பேச்சை மதித்து அவர் வழியில் நடப்போம்’
- 2.4 திட்டு ‘‘மேலதிகாரிகளிடம் பேச்சு வாங்கியதுதான் மிச்சம்’ என்று அலுத்துக்கொண்டான்’
- 2.1 (ஒன்றைச் செய்வதாகக் கூறி ஒருவர் கொடுக்கும்) வாக்கு; (சொன்ன) சொல்