தமிழ் பேச்சுத்துணை யின் அர்த்தம்

பேச்சுத்துணை

பெயர்ச்சொல்

  • 1

    (தனியாக இருக்கும் ஒருவர்) பேசிக்கொண்டிருப்பதற்குக் கிடைத்த நபர்.

    ‘பேச்சுத்துணைக்குக் கிடைத்த ஆளும் போய்விட்டார்’
    ‘அவளோடு பேச்சுத் துணையாகக் கடைவீதிவரைக்கும் போய்விட்டு வா’
    ‘வேலை கிடைத்து நண்பனும் சென்னைக்குப் போய்விட்ட பிறகு இருந்த ஒரே பேச்சுத்துணையும் போய்விட்டது’