தமிழ் பேச்சுமூச்சு யின் அர்த்தம்

பேச்சுமூச்சு

பெயர்ச்சொல்பெரும்பாலும் எதிர்மறை வினைகளுடன்

 • 1

  உயிருடன் அல்லது சுய நினைவுடன் இருப்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சு விடுதலும்.

  ‘அடிபட்டவுடன் பேச்சுமூச்சற்றுக் கீழே விழுந்தார்’
  ‘அதிர்ச்சியில் அவருக்குப் பேச்சுமூச்சு இல்லை’

 • 2

  ஏற்கனவே நடந்தது, சொன்னது போன்றவற்றைப் பற்றி நினைவு இருப்பதாக ஒருவர் மற்றவரிடம் காட்டிக்கொள்ளுதல்.

  ‘ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இரண்டு வருடம் ஆகிறது. திருப்பிக் கொடுப்பதுபற்றிப் பேச்சுமூச்சு இல்லை’
  ‘எனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று அவர் சொல்லி எட்டு மாதம் ஆகிறது. இன்று வரை அதைப் பற்றிப் பேச்சுமூச்சே இல்லை’