தமிழ் பேச்சுவார்த்தை யின் அர்த்தம்

பேச்சுவார்த்தை

பெயர்ச்சொல்

 • 1

  (தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்.

  ‘எல்லைப் பிரச்சினைபற்றி இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்’
  ‘உண்ணாவிரதம் இருந்த கிராம மக்களுடன் காவல்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்’

 • 2

  (சுமுக உறவின் அடையாளமாக) ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுதல்.

  ‘சொத்துத் தகராறுக்குப் பின் சகோதரர்கள் இடையே பேச்சுவார்த்தை இல்லை’