தமிழ் பேசாமல் யின் அர்த்தம்

பேசாமல்

வினையடை

 • 1

  (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ததற்கு அல்லது தேர்ந்தெடுத்ததற்குப் பதிலாக மற்றொன்றை) தயக்கம் சிறிதும் இல்லாமல்; யோசிக்காமல்.

  ‘இந்த மோசமான திரைப்படத்துக்கு வந்ததற்குப் பதிலாகப் பேசாமல் கடற்கரைக்குப் போயிருக்கலாம்’
  ‘நல்ல சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கிறாய்; பேசாமல் நீ என் வீட்டுக்கு வந்திருக்கலாம்’

 • 2

  ஒன்றும் செய்யாமல்.

  ‘பேசாமல் கொஞ்ச நேரம் மூலையில் உட்கார்’
  ‘பேசாமல் தன் போக்கில் போனவனை வம்புக்கு இழுத்து அடித்திருக்கிறார்கள்’