தமிழ் பேசாமல் விடு யின் அர்த்தம்

பேசாமல் விடு

வினைச்சொல்விட, விட்டு

  • 1

    (ஒன்று) முன்பு இருந்த நிலையிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிடுதல்.

    ‘வீட்டை இடித்துவிட்டுக் கட்டலாம் என்று யோசித்தேன். பணம் நிறையச் செலவாகும் என்பதால் பேசாமல் விட்டுவிட்டேன்’
    ‘ஒரு வாரமாக உடம்பு சரியில்லை என்கிறாய். பேசாமல் விட்டால் தானாகக் குணமாகிவிடுமா?’