தமிழ் பேச்சுக்கொடு யின் அர்த்தம்

பேச்சுக்கொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒன்றைத் தெரிந்துகொள்வதற்காகவோ உரையாடலைத் துவக்கும் விதமாகவோ அறிமுகமற்ற ஒருவருடன்) பேச ஆரம்பித்தல் அல்லது பேசுதல்.

  ‘புதிதாகக் குடிவந்திருந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் ‘எங்கே வேலைபார்க்கிறீர்கள்?’ என்று முதலில் பேச்சுக்கொடுத்தான்’
  ‘பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தான்’
  ‘அந்த நிருபருடன் பேச்சுக்கொடுத்துப் பார்த்ததில் கட்சியில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது’

 • 2

  பேச்சு வழக்கு (ஒருவருடன்) பொழுதுபோக்கும் விதத்தில் அல்லது மரியாதையை முன்னிட்டுப் பேசுதல்; உரையாடுதல்.

  ‘அவருடன் நீ பேச்சுக்கொடுத்துக்கொண்டிரு! இதோ வந்துவிடுகிறேன்’