தமிழ் பேட்டி யின் அர்த்தம்

பேட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பிரபலமானவரை அல்லது ஒரு துறையில் முக்கியமாக விளங்கும் ஒருவரைப் பத்திரிகை, தொலைக்காட்சி போன்றவற்றுக்காகச் சந்தித்துக் கேள்விகள் கேட்டு உரையாடித் தகவல்கள் பெறும் நிகழ்ச்சி.

    ‘பத்திரிகை, தொலைக்காட்சி என்று எல்லாவற்றிலும் சினிமா நடிகர்களின் பேட்டிதான்’
    ‘ஆங்கில நாளிதழ் ஒன்றில் நரம்பியல் நிபுணர் ஒருவரின் பேட்டி இடம்பெற்றுள்ளது’
    ‘தொலைக்காட்சிக்குப் பேட்டி தர மறுப்பவர்களும் உண்டு’