தமிழ் பேட்டை யின் அர்த்தம்

பேட்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) வசதி குறைந்த பகுதி.

  ‘எங்கள் பேட்டைக்கே வந்து தகராறு செய்கிறாயா?’
  ‘நீ என்ன பேட்டை ரவுடியா?’

 • 2

  பேச்சு வழக்கு பெரிய ஊர்களில் குறிப்பிட்ட பொருள்களின் விற்பனைக்காகப் பல கடைகள் அமைந்திருக்கும் இடம்.

  ‘நெல் பேட்டை’
  ‘வெற்றிலைப் பேட்டை’