தமிழ் பேணு யின் அர்த்தம்

பேணு

வினைச்சொல்பேண, பேணி

 • 1

  வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் ஒன்றைக் கவனித்துக்கொள்ளுதல்; சீர்கெடாமல் காத்தல்; பராமரித்தல்.

  ‘உடல்நலம் பேணுங்கள்’
  ‘உங்கள் கூந்தலைப் பேண என்ன செய்கிறீர்கள்?’
  ‘நம் இசை மரபைப் பலர் பேணிக் காத்திருக்கிறார்கள்’
  ‘மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே சமநிலை பேணப்பட வேண்டும்’