தமிழ் பேதலி யின் அர்த்தம்

பேதலி

வினைச்சொல்பேதலிக்க, பேதலித்து

  • 1

    (புத்தி, மனம்) குழப்பம் அடைதல்; சிந்தித்துச் செயல்பட முடியாமல் போதல்.

    ‘விபத்தில் குழந்தையைப் பறி கொடுத்துவிட்டுப் புத்தி பேதலித்து நிற்கிறாள்’
    ‘உன்னுடைய அழகும் புத்திசாலித்தனமும் அவளைப் பேதலிக்க வைத்துவிட்டது’