தமிழ் பேதை யின் அர்த்தம்

பேதை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு எதையும் பகுத்தறிந்து பார்த்துச் செயல்படத் தெரியாத தன்மை உடைய நபர்; எதையும் எளிதில் நம்பிவிடும் நபர்.

    ‘நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு விஷயத்தில் பேதைகளாகத்தான் இருக்கிறோம்’

  • 2

    உயர் வழக்கு (ஒரு பெண்ணின் மேலுள்ள) இரக்கத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘அவன் உன்னை ஏமாற்றிவிட்டானே, பேதைப் பெண்ணே!’