தமிழ் பேந்தப்பேந்த யின் அர்த்தம்

பேந்தப்பேந்த

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (‘விழித்தல்’ தொடர்பான வினைகளோடு) (செயல்பட வேண்டிய சூழலில்) என்ன செய்வதென்று தெரியாமல் அல்லது ஒன்றும் புரியாமல்; மலங்கமலங்க.

    ‘கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் என் தம்பி பேந்தப்பேந்த விழித்தான்’
    ‘மொழி தெரியாத ஊரில் பேந்தப்பேந்த விழித்தபடி அவன் நின்றான்’