தமிழ் பேய் யின் அர்த்தம்

பேய்

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் இறந்த பிறகு உருவமற்றுச் சஞ்சரிப்பதாக நம்பப்படும் அமானுஷ்யமான தீய சக்தி.

  ‘பேய், பிசாசு என்று சொல்லிக் குழந்தையைப் பயமுறுத்தாதே’

 • 2

  (அடையாக வரும்போது) பயப்படச் செய்யும் வகையில் ஒன்று தீவிரமாகவும் அதிகமாகவும் இருக்கிறது அல்லது நிகழ்கிறது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘பேய் மழை’
  ‘பேய்க் காற்று’
  ‘பேய் இருட்டு’
  ‘பேய்க் கூச்சல்’