தமிழ் பேய் அறைந்தாற்போல் யின் அர்த்தம்

பேய் அறைந்தாற்போல்

வினையடை

  • 1

    (ஒருவரின் முகத் தோற்றத்தைக் குறிக்கும்போது) மிகுந்த பீதிக்குள்ளாகி.

    ‘தந்தியைப் படித்ததும் அவன் முகம் பேய் அறைந்தாற்போல் ஆகிவிட்டது’
    ‘தொலைபேசியில் யார் உன்னிடம் பேசினார்கள்? இப்படிப் பேய் அறைந்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாயே?’