தமிழ் பேர்பண்ணு யின் அர்த்தம்

பேர்பண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உண்மையான ஈடுபாடு இல்லாமல் வெளித் தோற்றத்துக்காக ஒரு செயலைச் செய்வது போல்) பாவனை செய்தல்.

    ‘எனக்கு வயிறு சரியில்லை. அதனால் திருமண வீட்டில் சாப்பிட்டதாகப் பேர்பண்ணி விட்டுக் கிளம்பினேன்’
    ‘நிகழ்ச்சிக்கு வந்ததாகப் பேர்பண்ணிவிட்டு அமைச்சர் உடனே புறப்பட்டுவிட்டார்’