தமிழ் பேரம் யின் அர்த்தம்

பேரம்

பெயர்ச்சொல்

  • 1

    பொருள் வாங்குவதற்கு முன் விலையைக் குறைப்பது, சலுகைகள் கேட்பது குறித்து வாங்குவோரும் விற்பவரும் பேசுதல்.

    ‘பேரம் பேசாமல் கடைக்காரன் சொன்ன விலைக்கே வாங்கி வந்துவிட்டாயா?’
    ‘எண்ணெய் பேரம்பற்றி இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது’
    உரு வழக்கு ‘தேர்தல் கூட்டணி பேரங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை’