தமிழ் பேர்வழி யின் அர்த்தம்

பேர்வழி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒருவரைக் குறிப்பிடும்போது) ஆள்; நபர்.

  ‘அவன் ஒரு சந்தேகப் பேர்வழி’
  ‘ஊழல் பேர்வழிகள்’
  ‘அவர் ஒரு தமாஷான பேர்வழி’
  ‘அவனுடைய அப்பா ஒரு கண்டிப்பான பேர்வழி’

 • 2

  பேச்சு வழக்கு ஒருவரைக் குறைகூறும் சூழ்நிலையில் அவரைப் பற்றிய ஒரு கூற்றை அடுத்துப் பயன்படுத்தும் சொல்.

  ‘எட்டு மணிக்கு வருகிறேன் பேர்வழி என்று சொல்லி விட்டு இன்னமும் வரவில்லை அவன்’
  ‘எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு இப்போது சிரமமாக இருக்கிறது என்கிறார்’