தமிழ் பேஷ் யின் அர்த்தம்

பேஷ்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு பிரமாதம்.

  ‘கல்யாணத்தை பேஷாக நடத்திவிடுவோம்’
  ‘பேஷான பாடல்கள்’
  ‘சாப்பாடு பேஷாக அமைந்துவிட்டது’

தமிழ் பேஷ் யின் அர்த்தம்

பேஷ்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு ஒருவரின் திறமையை அல்லது ஒன்றின் அருமையைப் பாராட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘பேஷ்! சரியான யோசனை’
  ‘‘சாப்பாடு பேஷ், பேஷ்!’ என்றவாறே தாத்தா வந்தார்’