தமிழ் போக்குக்காட்டு யின் அர்த்தம்

போக்குக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஏமாற்றும் விதத்திலோ அல்லது அகப்படாமல் இருப்பதற்காகவோ) ஒன்றைச் செய்வதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு வேறொன்றைச் செய்தல்; பாவனை செய்தல்.

    ‘பள்ளிக்கூடத்துக்குப் போவதாகப் போக்குக்காட்டிவிட்டுப் படத்துக்குப் போய்விட்டான்’
    ‘நீண்ட நாட்களாக வனத்துறையினருக்குப் போக்குக்காட்டிக்கொண்டிருந்த சந்தனக் கடத்தல்காரன் நேற்று அகப்பட்டான்’