தமிழ் போக்குவரத்து யின் அர்த்தம்

போக்குவரத்து

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பாதையில் வாகனங்கள் சென்று வருதல்.

  ‘இரவு பதினோரு மணிக்கு மேல்தான் இந்தச் சாலையில் போக்குவரத்து குறைவாக இருக்கும்’
  ‘போக்குவரத்து அதிகம் இல்லாத சாலையில் வாகனம் ஓட்டப் பழகிக்கொள்ளலாம்’
  ‘சாலைகளில் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன’
  ‘போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி இது’
  ‘போக்குவரத்துக் காவலர்’

 • 2

  (பேருந்து, கப்பல், விமானம் முதலியவற்றைப் பயன்படுத்தி) ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்யும் செயல் அல்லது பொருள்களை அனுப்புவதும் பெறுவதும் ஆகிய செயல்கள்.

  ‘முற்காலத்தில் கிராமத்து மக்கள் போக்குவரத்துக்கு மாட்டு வண்டியைத்தான் நம்பியிருந்தனர்’
  ‘கப்பல் போக்குவரத்துத் துறை’
  ‘வான்வழிப் போக்குவரத்து’
  ‘அவசியமான பொருட்களின் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தக் கூடாது’

 • 3

  ஒருவருக்கொருவர் கடிதம் அனுப்பிக்கொள்ளும் நிலை.

  ‘அவரை நான் சந்தித்தது இல்லை என்றாலும் எங்களுக்குள் அவ்வப்போது கடிதப் போக்குவரத்து உண்டு’

 • 4

  பேச்சு வழக்கு (உறவினர்கள், நண்பர்கள் போன்றோரின் இடையே உறவின் அடையாளமாகத் தங்களுக்குள் ஒருவரை ஒருவர்) போய்ச் சந்தித்துவிட்டு வருதல்.

  ‘எங்களுக்குள் இப்போது போக்குவரத்து கிடையாது’